திண்டுக்கல்லை சேர்ந்த பெண்ணிடம் 21,65,500 ரூபாய் பணத்தை ஏமாற்றி மோசடி செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு
திண்டுக்கல் நாகல் நகர் பகுதியை சேர்ந்த அம்சவல்லி(38) இவர் ஞானாம்பிகை டோர்ஸ் என்ற பெயரில் ரெடிமேட் டோர் சப்பளை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரிடம் முருகன் என்பவர் குறைந்த விலையில் பிவிசி டோர் மற்றும் ரெடிமேட் மர டோர் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து ரூ21,65,500 பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக மாவட்ட S.P.பாஸ்கரன் அவர்களிடம் அம்சவல்லி புகார் அளித்ததை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து முருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment