முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற(கலை பண்பாட்டு இயக்கம் )100 கலைஞர்கள் பங்குபெறும் கலைத்திருவிழா மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் கலையரங்கத்தில், கலைப்பண்பாட்டு இயக்ககத்தின், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 100 கலைஞர்கள் பங்குபெற்ற கலைத்திருவிழாவை இன்று(28.11.2023) தொடங்கி வைத்து, சிறந்த கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அருகில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய தலைவர் திரு. வாகை சந்திரசேர், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் திரு.ச.ராஜப்பா உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment