நிலக்கோட்டை எத்திலோடு ரேஷன் கடையில் வழங்கிய அரிசியை பிளாஸ்டிக் அரிசி என நினைத்து பீதி அடைந்த பொதுமக்கள் :
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை எத்திலோடு ரேஷன் கடையில் 20:10:23 அன்று வழங்கிய அரிசியை வாங்கிச் சென்ற பொதுமக்கள் சமைப்பதற்காக அரிசியை நீரில் ஊற வைத்த போது ஒரு சில அரிசிகள் தண்ணீரின் மேல் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் மேலும் அவை பிளாஸ்டிக் அரிசி ஆக இருக்குமோ என நினைத்து எத்திலோடு ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிற்றனர் இதனால் அங்கு வந்த நிலக்கோட்டை வட்ட வழங்கல் அதிகாரி தங்கேஸ்வரி அப்பகுதி மக்களிடத்தில் சமரசம் செய்தார் மேலும் செரிவூட்டப்பட்ட அரிசியை தான் அப்ப பகுதி மக்களுக்கு வழங்குவதாகவும் மேலும் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் தைரியமாக சாப்பிடலாம் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றும் அப்பகுதி மக்களுக்கு எடுத்துரைத்து சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தார் மேலும் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment