திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பு நகர் வடக்கு காவல் துறையினர் விசாரணை
திண்டுக்கல் லட்சுமி சுந்தரம்காலனி சிவா நகர் பகுதியை சேர்ந்தவர் அமுதா(40).இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.இவர் எஸ்.எம்.பி.எம் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அமுதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்றனர். இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மனோகரன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment