தொடர் விடுமுறையால் திண்டுக்கல் ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் பாதுகாப்பு பணியில் கூடுதல் காவலர்கள் ஈடுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திண்டுக்கல் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் நேற்று முதலே பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. தென்
மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக திண்டுக்கல் இருப்பதால் பல ஊர்களில் இருந்து இங்கு வந்து பின்னர் தங்கள் பகுதிகளுக்கு செல்கின்றனர்.
குறிப்பாக தேனி, பெரியகுளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்பவர்கள் திண்டுக்கல் வந்து பின்னர் இங்கிருந்து பஸ் மூலம் தங்கள் ஊருக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே திண்டுக்கல் பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதே போல் திண்டுக்கல்லில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்பவர்களும் டவுன் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இன்னும் 3 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு பணியில் கூடுதல் காவலர்களை ஈடுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment