திண்டுக்கல்லில் 6 வயது சிறுமிக்கு டெங்கு அறிகுறி -அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி:
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர் பட்டியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ஆஸ்ப த்திரியில் பரிசோதனை செய்ததில் டெங்கு அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து அந்த பகுதியில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் படி மருத்துவ குழுவினர் முகாமிட்டு வீடு வீடாக சென்று மருத்தவ பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment