திண்டுக்கல் மாவட்டத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு:
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி பூங்கொடி அவர்கள் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் இன்று வெளியிட்டார் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர் நத்தம் ,ஆத்தூர், நிலக்கோட்டை ஏழு சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 40 ஆயிரத்து 831 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 95 ஆயிரத்து 483 பேரும், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 45 ஆயிரத்து 135 பேரும், இதர வகுப்பை சேர்ந்தவர்கள் 213 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 49 ஆயிரத்து 652 பேர் கூடுதலாக உள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 219 வாக்குச்சாவடிகள் உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment