செந்துறை அருகே தண்ணீர் தர மாட்டீர்கள், பால் வேண்டுமா எனக்கேட்டு லாரியை சிறைபிடித்த நாம் தமிழர் கட்சியினர். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 9 October 2023

செந்துறை அருகே தண்ணீர் தர மாட்டீர்கள், பால் வேண்டுமா எனக்கேட்டு லாரியை சிறைபிடித்த நாம் தமிழர் கட்சியினர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறை அடுத்துள்ள கருத்தநாயக்கன்பட்டியில் தனியார் பால் செறிவூட்டு நிலையம் உள்ளது. பால் மற்றும் பால் பவுடர் இந்நிறுவனத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும், மாவட்டங்கள், மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது இந்நிலையில் இந்நிறுவனத்திற்கு பால் பவுடர் ஏற்ற வந்த கர்நாடக மாநில பதிவில் கொண்ட லாரி ஒன்று வந்துள்ளது இதை அறிந்த நத்தம் வடக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் தர்மராஜ், பொருளாளர் மணிகண்டன், செய்தி தொடர்பாளர் சந்தோஷ், இளைஞர் பாசறை திவாகர் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பால் செறிவூட்டும் நிறுவனத்திற்கு முன்பாக லாரியை சிறை பிடித்து கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தரவு மாட்டீர்கள், இங்கிருந்து பால் வேண்டுமா? எடுக்க விடமாட்டோம் என கோஷம் எழுப்பினர். 


பின் சம்பவ இடத்துக்கு வந்த நத்தம் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜோதிமணி உள்ளிட்ட காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் லாரியில் பால் பவுடர் ஏற்ற வில்லை என உறுதி அளித்ததை எடுத்து  நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதனால் சுமார் 3 மணி நேரமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad