திண்டுக்கல்லில் நேற்று மாற்றி அமைக்கப்பட்ட பிளாட்பாரங்களில் வந்தேபாரத் சோதனை ஓட்டம்
நேற்று காலை மதுரையில் இருந்து தாமரைப்பாடி வரை அதிவேகத்தில் வந்தேபாரத் ரெயிலை இயக்கி சோதனை நடத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி மதுரையில் காலை 10 மணிக்கு புறப்பட்ட வந்தேபாரத் 11.30 மணிக்கு தாமரைப்பாடியை வந்தடைந்தது. மீண்டும் தாமரைப்பாடியில் இருந்து 12.30 க்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு மதுரை ரெயில்நிலையத்தை சென்றடைந்தது. 55 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரெயில் இடையில் எந்த ரெயில்வே ஸ்டேசனிலும் நிற்காமல் சென்றது.
திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் 3 மற்றும் 4-வது பிளாட்பாரங்களில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதன் மூலம் தண்டவாளத்தின் உறுதி தன்மையும் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment