திண்டுக்கல் பொதுமக்கள் 8 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல்
தமிழக முதலமைச்சர் அவர்கள் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தை வரும் 4-ம் தேதி அன்று காணொளி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தை 04.11.2023 அன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளார்கள்.
நடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை அன்று நலவாழ்வு பேணுவதற்கான நடை பயிற்சியினை (Health Walk) ஊக்குவிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்படும் என்ற மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஆர்எம் காலனி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் தொடங்கி இ.வி.ஆர். ரோடு, எம்.வி.எம்., கல்லூரி திருப்பம், ஆர்.எம். காலனி குறுக்கு சாலைகள் வழியாக மீண்டும் கூடைப் பந்தாட்ட மைதானத்தில் முடியும் வகையில் 8 கி.மீட்டர் துாரம் கொண்ட நடைபாதை தேர்வு செய்ய ப்பட்டுள்ளது. இச்சாலைகள் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வண்ணம் முழுமையாக செப்பனிடப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.
பொதுமக்கள் வசதிக்காக சாய்வு இருக்கைகள் மற்றும் குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கென பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் பொது சுகாதார துறை ஏற்பாடு மூலம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சுகாதார துறையின் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 04.11.2023 அன்று
காணொலி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
அதனைத்தொடர்ந்து திண்டுக்கல்லில் நடைபயிற்சி செல்லும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி தினமும் 8 கி.மீட்டர் துாரம் அதாவது
10.000 காலடிகள் நடந்தால் சர்க்கரை நோய், இரந்த அழுத்தம் 28 சதவீதம். இதய நோய்
தாக்கம் 30 சதவீதம் குறைகிறது என அறியப்படுகிறது. மேலும் நடைபயிற்சியானது நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. எனவே,
பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும்
நடைபயிற்சி மேற்கொண்டு, உடல் ஆரோக்கியம் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி மொநாபூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment