பட்டிவீரன்பட்டியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களில் 2 பேருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.15 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை அடுத்த சித்தரேவு பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு அலாவுதீன் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சித்தரேவு பகுதியைச் சேர்ந்த சலீம்(35) என்பவர் உட்பட 6 பேரை பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் S.P.பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் குருவத்தாய் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் சூசை ராபர்ட் ஆகியோரின் சீரிய முயற்சியால் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள் முதல் குற்றவாளி உயிரிழந்த நிலையில் 2 மற்றும் 3 குற்றவாளிகளான குத்புதீன்(33), அப்பாஸ்(45) ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையுடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.15,000 அபராதமும் 4 மற்றும் 5 குற்றவாளிகளான சாதிக்(35), சையது அபுதாகிர்(35) ஆகிய இருவருக்கும் ரூ.500 அபராதமும் 6-ம் குற்றவாளியை விடுவித்தும் தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment