வெளி மாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ரயில் நிலையத்தில் இரண்டு நாட்களாக வழி தெரியாமல் சுற்றித் திரியும் மூதாட்டி இவர் திண்டுக்கல் மாவட்ட இரயில் நிலையம் அருகில் 2 நாட்களாக சுற்றித்திரிந்து இருந்து வருகிறார் மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் இவருக்கு உணவும் அளித்து வருகின்றனர். இவர் தமிழ் மொழியில் பேசாமல் தெலுங்கு பேசுகிறார். இவருடைய பெயர் தெரியவில்லை மேலும் இவர் உச்சரிக்கையில் பேசும்போது(காக்கி நாடா) என்று மட்டும் சொல்கிறார் இவரை பற்றி ஏதும் தகவல் தெரியவில்லை சற்று மன நலம் பாதிக்கபட்டவர் போல் இருக்கிறார் மேலும் திண்டுக்கல் மாவட்ட ரயில்வே காவல்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இவரை இவருடன் சம்பந்தப்பட்ட உரியவர்களிடம் கொண்டு சேர்த்து விடுமாறு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன். மேலும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment