பத்திரிக்கையில் வந்தது தவறான தகவலாகும் திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
தமிழகத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி புரிந்தவர்களுக்கு 8 வாரம் பணம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டடு தவறான தகவலாகும்.
மத்திய அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு 2,100 கோடி வழங்க வேண்டும். ஆனால் தற்பொழுது 1,800 கோடி கடந்த வாரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒதுக்கப்பட்ட நிதி தற்பொழுது சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதித்தொகை 300 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்த பின்பு சம்பந்தப்பட்ட வர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். பத்திரிக்கையில் வந்தது தவறான தகவலாகும் என கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment