திண்டுக்கல் விவேகானந்தர் நகர் பூங்கா அருகே மாநகராட்சியை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் கவுன்சிலர் தனபாலன் உட்பட 30 க்கும் மேற்பட்டோர் கைது
திண்டுக்கல் விவேகானந்தர் நகர் பூங்கா அருகே 14-வது வார்டில் சாலை, குடிநீர், பாதாள சாக்கடை, சுகாதாரம், மழைநீர் வடிகால், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் செய்வதில் மெத்தனம் காட்டும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 14- வது வார்டு மாமன்ற உறுப்பினர் தனபாலன் தலைமையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது.
இந்நிலையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி ரத்து செய்யப்பட்ட பிறகு உண்ணாவிரதம் இருந்த பாஜக 14 வது வார்டு கவுன்சிலர் தனபாலன் உட்பட பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment