திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அருகே இழந்தாரியூரில் வீட்டில் தீ விபத்து 3 பேர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அருகே இழந்தாரியூரில் மயில்சாமி என்பவர் வீட்டில் இவரது உறவினர்கள் வேலுச்சாமி, பழனிச்சாமி, சந்துரு ஆகியோர் தங்கியுள்ளனர். அதிகாலையில் அலறல் சத்தம் கேட்டு பார்த்தபோது மூன்று பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. இதில் சந்துரு, பழனிச்சாமி இருவர் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையிலும், வேலுச்சாமி என்பவர் கோவை மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தடயவியல் துறை நிபுணர் மூலம் கண்டறிந்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment