திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் பணிக்காலத்தில் உயிர் நீத்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு டிஐஜி , மாவட்டஆட்சியர், மாவட்ட எஸ்பி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதான வளாகத்திலுள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. பணியின் போது இறந்த காவலர்களுக்கு திண்டுக்கல் சரக டிஐஜி அபிநவ்குமார், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இறந்த காவல்துறையினர் குறித்து நினைவு கூர்ந்தனர்.
தொடர்ந்து டிஎஸ்பி. கோகுலகிருஷ்ணன், டிஎஸ்பி.ஆனந்தராஜ், ஆய்வாளர்கள் உலகநாதன், அமுதா மற்றும் காவலர்கள் மலர் வளையம் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறந்த காவலர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment