திண்டுக்கல் கிழக்கு: திருச்சியில் இருந்து திண்டுக்கல் ரயில் நிலையம் செல்லும் பயணிகள் ரயில் நேரம் மாற்றம் :
திண்டுக்கல்லில் இருந்து காலை 6:15 மணிக்கு திருச்சிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது கொரோனா பிரச்சினைக்கு பிறகு எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது மேலும் காலை நேரத்தில் எந்த ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் இல்லாததால் எக்ஸ்பிரஸ் வரும் தளத்தில் எல்லா ஸ்டேஷன்களிலும் நின்று புறப்பட்டாலும் விரைவாக திருச்சி செல்கிறது அதே நேரம் திரும்பும் மார்க்கத்தில் திருச்சியில் மாலை6:30 புறப்படும் இதன் பின்னால் வரும் வைகை எக்ஸ்பிரஸிற்கு வழிவிட 30 நிமிடம் நிறுத்தப்பட்டு வருகிறது மேலும் தற்போது வந்தே பாரத் ரயில் அறிமுகத்தின் காரணமாக அதற்கும் வழி விட ஏதாவது ஒரு ஸ்டேஷனில் நிறுத்தம் செய்யப்பட்டு பிறகு புறப்படும் நிலை உருவாகியுள்ளது இதனால் அதிகமான நேரம் எடுத்துக் கொள்கிறது இதை தவிர்க்க திருச்சியில் 6:10 க்கு புறப்படும் நேரம் மாற்றப்படுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment