விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை பள்ளியில் சேர்க்க குவிந்த பெற்றோர்கள் :
திண்டுக்கல் கிழக்கு விஜயதசமியை முன்னிட்டு சின்னாளப்பட்டி சேரன் வித்தியாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டினார் மேலும் விஜயதசமி நன்னாளில் குழந்தைகளை ஒரு தட்டில் அரிசியை பரப்பி அதில் குழந்தைகளின் விரலை பிடித்து தமிழ் மொழியின் முதல் மொழியான அ என்ற எழுத்தை எழுத வைப்பார்கள் அதேபோல் இன்று சின்னாளப்பட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் சேர்க்க ஆர்வம் காட்டியும் தங்கள் குழந்தைகளை அரிசியால் விரலை பிடித்து எழுத வைத்தும் மகிழ்ந்தனர் இப்பள்ளியில் 1to12 வரை படிக்க வைக்க முடியும் என்பதால் பெற்றோர்கள் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment