திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள இராமலிங்கம்பட்டி அருள்மிகு பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் பிரபல திரைப்பட பாடகர் தேசிய விருதாளருமான வேல்முருகன் சுவாமி தரிசனம்
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள இராமலிங்கம் பட்டியில் அருள்மிகு பாதாள செம்பு முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலின் கருவறை, பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. அதில் 17 அடிக்கு 21 அடி என்ற அளவில் முருகன் சன்னிதி அமைந்திருக்கிறது. இந்த கோவில் சமீபத்தில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. சினிமா பிரபலங்கள் ஏராளமானார் இங்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். அந்த வகையில்
பிரபல திரைப்பட பாடகர் மற்றும் தேசிய விருதாளருமான வேல்முருகன் இராமலிங்கம்பட்டி அருள்மிகு பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் முருகன் பாடல் பாடியும்,கருங்காலி மாலை சாற்றியும் வழிபாடு செய்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment