விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் சீலப்பாடி பகுதியில் உள்ள ஸ்ரீ வாணி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது
திண்டுக்கல் ஸ்ரீ வாணி வித்யாலயா பள்ளியில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு தினசரி பூஜைகள் நடைபெற்றன.இன்று சரஸ்வதி படம் முன்பு தேங்காய், பழம், மஞ்சள்,குங்குமம் உள்ளிட்டவை வைத்து வழிபாடு நடத்தி அரிசி மற்றும் நெல்லில் குழந்தைகளை அகர வரிசையின் முதல் எழுத்தான 'அ' என்ற எழுத்தை எழுத வைத்தனர். மேலும் குழந்தைகளின் நாக்கிலும் கல்விக்கான போதனையை தொடங்கும் வகையில் 'அ'கர எழுத்துக்களை எழுதினர். முன்னதாக பள்ளியின் சார்பாக பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.விஜயதசமி மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment