ஆத்தூர்:இல்லம் தேடி எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் அக்டோபர் 28 காலை 10க்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் அறிவுறுத்தலின்படி இல்லம் தேடி எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது இந்நிகழ்வில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவ அலுவலர் அரவிந்த நாராயணன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார் திண்டுக்கல் மாவட்டம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர் ஜெசிந்தா. சுகாதார ஆய்வாளர் சந்திரமோகன். எச்ஐவி தன்னார்வல ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராமு. நம்பிக்கை மைய அலுவலர் கண்ணன். மேலும் இந்நிகழ்ச்சியை ஆத்தூர் அரசு மருத்துவமனை ஐ சி டி சி ஆற்றுநர் கண்ணன் ஏற்பாடு செய்தார். ஆத்தூர் முக்கிய வீதிகள் தெருக்கள் பகுதிகளில் ஊர்வலம் நடைபெற்றது மேலும் எச்ஐவி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment