திண்டுக்கல் கிழக்கு: வழி தெரியாமல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த மூதாட்டி:
மயிலாடுதுறை மாவட்டம் மாப்புடுகை அவையம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரது மனைவி காந்தா வயது 75 என்பவர் 21:10:22 தேதி தன் மகள் மாலா என்பவரை பார்ப்பதற்காக வீட்டில் யாருக்கும் சொல்லாமல் மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் ரயிலில் ஏறி வந்துள்ளார் விவரம் தெரியாமல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளார். வழி தெரியாமல் திண்டுக்கல் நடைபாதையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் வயதான தன்னுடைய தாயை பல நாள் காணாமல் தேடிய மகள் மாலா மருமகன் ஸ்ரீதரன் உட்பட இருவரும் திண்டுக்கல் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் விசாரித்து உள்ளனர் 26: 10 :23 அன்று திண்டுக்கல் ரயில்நிலைய நடைமேடையில் சுற்றித்திரிந்த தன்னுடைய தாயை கண்ட மகள் மாலா திண்டுக்கல் இருப்புப் பாதை சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் தனது தாயை தன்னுடன்ஊருக்கு அழைத்துச் சென்றார் :
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment