திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு: அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றது :
திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலை திருவிழாவை திண்டுக்கல்மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி அவர்கள் தலைமை வகித்து தொடங்கி வைத்தார் மேலும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திரு இளமதி ஜோதி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் மாவட்ட அளவிலான போட்டிகளில் மாவட்டத்திற்கும் படிக்கும் பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் திரு. பூங்கொடி அவர்கள் மாணவ மாணவிகளுக்கு கூறினார் மேலும் இவ்விழாவில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன். மாவட்ட தலைமை கல்வி அலுவலர் நசாருதீன். மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர். மற்றும் ஆசிரியர் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment