திண்டுக்கல்அம்பாத்துரை அருகே ரயிலில் அடிபட்டு பெண் பலி :
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அருகே ஆலமரத்துபட்டியைச் சேர்ந்த விழிமலர்(41) என்ற பெண் கவனக்குறைவாக ரயில்வே டிராக்கை கடக்கும் போது எதிர்பாராத விதமாக ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டார் தூக்கி வீசப்பட்ட விழிமலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்ட பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்-மணிகண்டன் எஸ்.பி. தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் குமார் ஆகியோர் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment