இந்து மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் :
திண்டுக்கல் மாவட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று அக்டோபர் 14 காலை 10 மணிக்கு இந்து மக்கள் கட்சி சார்பாக தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்க்கு வரக்கூடிய காவிரி நீரை தர மறுத்த கர்நாடக காங்கிரஸ் கட்சியை கண்டித்தும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் இந்திய கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளையும் கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்
No comments:
Post a Comment