திண்டுக்கல்லில் கழுத்தை அறுத்து மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது
திண்டுக்கல் ஜின்னாநகரை சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மனைவி ஜனா பேகம் (30) இன்று அதிகாலை கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை இஸ்மாயில் அறுத்தார்.
இதனால் வலி தாங்காமல் ஜனாபேகம் ரத்த வெள்ளத்தில் கதறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து ஜனாபேகத்தை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நகர் தெற்கு போலீசார் இஸ்மாயிலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment