வடமதுரை அருகே உறை கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உயிருடன் மீட்ட வேடசந்தூர் தீயணைப்புத் துறையினர்
திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அருகே மொட்டணம்பட்டியில் 50 அடி ஆழமுள்ள உறை கிணறு ஒன்று உள்ளது. இந்த உறை கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த பாண்டி(45) என்பவர் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்புத் துறையினருக்குஅருகில் இருந்தவர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு வலையை கொண்டு பாண்டியை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment