திண்டுக்கல்லில் இறைச்சி விற்க தடை மீறி ஆடு அறுத்த கடையில் இறைச்சி பறிமுதல்
திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசாணையின்படி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்.02-ந் தேதி இன்று அனைத்துவிதமான ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டிருந்தது . உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்யவும் கூடாது. கடைகளையும் திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்கள் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திண்டுக்கல்லில் இன்று
இறைச்சி விற்க தடை விதித்தும் தடையை மீறி ஆடு அறுத்த கடையில் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment