திண்டுக்கல்லில் கோவில் பூட்டை உடைத்து அம்மன் தங்கதாலிகள் திருட்டு:
திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு நேற்று முதல் கொலு வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. நேற்று இரவு பூஜைகள் முடிந்த பிறகு கோவிலை அடைத்து விட்டு சென்று விட்டார். இன்று காலை கோவிலுக்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் 3 அம்மன் சன்னதிகளின் கதவுகளும் திறக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலிகள் திருடு போயிருந்தன. இது குறித்து அவர் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடந்து வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment