திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மண்டலத்தில் மலைப் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுனர்களுக்கு பயிற்சி வாகனம் மூலம் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 5 அரசு பணிமனையில் மலைப்பகுதியில் பணிபுரியும் ஓட்டுனர்கள் பாதுகாப்பாக ஓட்டுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மண்டல நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் உத்திரவின் பேரில் பொதுமேலாளர் டேவிட்சாலோமன் தலைமையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. வத்தலக்குண்டு பணிமனையில் துவங்கிய இந்த பயிற்சியானது. தாண்டிக்குடி மலைப்பகுதியில் குறுகலான மலைப்பாதையில் பாதுகாப்பாக ஓட்டுவது குறித்து புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. ஓட்டுனர்கள் அச்சமின்றியும் பாதுகாப்பாகவும் வாகனங்களை இயக்குவது குறித்து கருத்து கேட்க்பட்டது.
மலைப்பகுதியில் எவ்வாறு வாகனங்ளை இயக்க வேண்டும் என்றும் அதில் உள்ள இடர்பாடுகளை சமாளிப்பது குறித்தும 30 ஓட்டுனர்களுக்கு பயிற்சி வாகனம் மூலம் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. கொடைக்கானல், பழனி, திண்டுக்கல், வத்தலக்குணடு, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம், பகுதி ஓட்டுனர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment