நூறுநாள் வேலைக்கான ஊதியத்தை தர மறுக்கும் அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 11 October 2023

நூறுநாள் வேலைக்கான ஊதியத்தை தர மறுக்கும் அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை.


திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோருக்கும் ஒரே வாழ்வாதாரம் 100 நாள் வேலை திட்டம் மட்டுமே. இத்திட்டத்தில் கிடைக்கும் வருமானத்தை நம்பியே பல குடும்பங்கள் உயிர் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், அரசு கடந்த பத்து வாரங்களுக்கு மேலாக நூறுநாள் வேலை செய்தவர்களுக்கான ஊதியத்தை வழங்காமல் காலம் கடத்தி வருகிறது. ஊதியம் கிடைக்காத காரணத்தினால், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லட்சக்கணக்கான கோடிகளை தள்ளுபடி செய்யும் அரசு ஏழை எளிய கிராமப்புற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய 100 நாள் வேலைக்கான ஊதியத்தை பிடித்து வைத்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தராமல் இருப்பது வேதனை.


மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக 100 நாள் வேலைக்கான ஊதியத்தை அரசு வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமையேற்று நடத்தினார். இதில், பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad