நத்தம் அருகே ஆபத்தான முறையில் வேகமாக செல்லும் டிப்பர் லாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நத்தம் அருகே பாதசிறுகுடியில் செயல்பட்டு வருகிறது யுனிவர்சல் புளூ மெட்டல் கிரசர். இங்கு தினமும் 50 க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் ஜல்லி ஏற்றுவதற்காக குமரபட்டி, பாதசிறுகுடி வழியாக வருகிறது. அவ்வாறு வரும் லாரிகள் அதி வேகமாக செல்கிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. நேற்று ஒரு டிப்பர் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இன்று அதிகாலை பாதசிறுகுடி வழியாக வந்த டிப்பர் லாரி மின் கம்பத்தில் மோதியதால் மின் வயர்கள் சாலையின் குறுக்கே ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டுள்ளது. வேகமாக செல்லும் டிப்பர் லாரிகளால் உயிர் சேதம் ஏற்படும் என இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment