திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது விற்ற 5 பேர் கைது :
திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா, பழனி, A.வெள்ளோடு, தருமத்துப்பட்டி, மஞ்ச நாயக்கன்பட்டி, நெய்க்காரன்பட்டி, ஆகிய பகுதிகளில் திண்டுக்கல் மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் தலைமையில் ஆய்வாளர் ஜேம்ஸ் ஜெயராஜ். சார்பு ஆய்வாளர் முரளி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியின் போது கள்ளத்தனமாக மதுவிற்ற எரியோட்டைச் சேர்ந்த 1.சிவக்குமார். A.வெள்ளோடைச்சேர்ந்த 2.அருள் ஞான பிரகாசம். மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 3.விஜயன். தருமத்துப்பட்டி சேர்ந்த 4.மனோஜ் குமார். நெய்க்காரன்பட்டியைச் சேர்ந்த 5.மயில்சாமி ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து 46 போலி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment