டயர் குடோன் உரிமையாளருக்கு ₹20000 அபராதம் விதித்த திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் அதிரடி நடவடிக்கை:
திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்ட திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில் பழநி சாலையில் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் கோவில் தெரு பகுதியில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் அஜாக்கிரதையாக குவிக்கப்பட்டு இருந்த சுமார் 250 பழைய டயர்கள் திண்டுக்கல் மாநகராட்சியால்பறிமுதல் செய்யப்பட்டது மேலும் குடோன் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது மேலும் இதுபோன்று அந்தப் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் இதே போன்று திண்டுக்கல் பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment