திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாத 28 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தாத நபர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் 15 வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று ரவுண்டுரோடு புதூர், நாகல்புதூர், சாமியார்தோட்டம், ஆர்.எம்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தாத 13 வீடுகளின் குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment