பழனி சின்ன கவுண்டன் புதூரில் லாரியும் சரக்கு வேணும் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலி: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 31 October 2023

பழனி சின்ன கவுண்டன் புதூரில் லாரியும் சரக்கு வேணும் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலி:


பழனி  சின்ன கவுண்டன் புதூரில் லாரியும் சரக்கு வேணும் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலி: 



திண்டுக்கல் மாவட்டம் பழனி கொழுமம் சாலை அருகே உள்ள சின்ன கவுண்டன் புதூர் என்ற இடத்தில் தேங்காய் உரிப்பதற்காக ஆட்களை ஏற்றி சென்ற வேனும் செங்கல்  ஏற்றி வந்த லாரியும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் பெரியசாமி காளிமுத்து ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர் இவர்களை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். செங்கல் ஏற்றி வந்த லாரியின் அடியில் வேன் சிக்கிக் கொண்டதால் ஜேசிபி இயந்திரம் மூலம் நீண்ட நேரம் போராடி  விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றினர் இதனால் பழனி கொழுமம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் விபத்து குறித்து பழனி தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர்  பி.கன்வர் பீர்மைதீன்.

No comments:

Post a Comment

Post Top Ad