வேடசந்தூரில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது, 1 1/2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், செல்போன் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வேடசந்தூர் டிஎஸ்பி துர்கா தேவி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் மற்றும் டிஎஸ்பி தனிப்படையினர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தட்டார்பட்டி பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த வேடசந்தூரை சேர்ந்த சசிகுமார் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் (எ) மாஸ் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 1/2 கிலோ கஞ்சா, செல்போன், இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment