நிலக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே நேற்று கூலித் தொழிலாளி அழகரை கொலை செய்த வழக்கில் ஐந்து பேர் ஜே எம்1 நீதிமன்றத்தில் சரணடைந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே கூலித் தொழிலாளி அழகர் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் நேற்று பட்டப்பகலில் வெட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நிலக்கோட்டை இரும்பு கடையில் அழகர் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் இன்று திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே எம்1 நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment