திண்டுக்கல் எல்ஐசி கிளை II, புதிய பிரம்மாண்டமான கட்டிட திறப்பு விழா
இன்று திண்டுக்கல்லில் சாலை ரோட்டில் இயங்கி கொண்டிருக்கும் திண்டுக்கல் கிளை-2 பழனி ரோட்டில் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற உள்ளது. அதற்கான புதிய பிரமாண்டமான கட்டிட திறப்பு விழா பழனி ரோட்டில் உள்ள LIC வளாகத்தில் நடைபெற்றது.
புதிய கட்டிடத்தினை LIC யின் தென் மண்டல மேலாளர் திரு G.வெங்கடரமணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் தென்மண்டல முதன்மை பொறியாளர் திரு ஆர் எஸ் சவுத்ரி, மதுரை கோட்டத்தின் முதுநிலை கோட்ட மேலாளர் திரு V.நாராயணன் அவர்கள் மற்றும் வணிக மேலாளர் திரு முத்தையன் அவர்களும் மேலாளர் விற்பனை திரு லூர்து செல்வகுமார், திண்டுக்கல் கிளை மேலாளர் திரு சரவணா அவர்கள் மற்றும் துணை கிளை மேலாளர் S.நரேஷ் , முதல் நிலை அதிகாரிகள் வளர்ச்சி அதிகாரிகள், முதன்மை காப்பீட்டு ஆலோசகர்கள், ஊழியர்கள் முகவர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment