திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு கள்ளிமந்தயம் போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது கள்ளிமந்தயம் ஊராட்சி.இது ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இதில் கள்ளிமந்தயம்அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் உத்தமி என்ற மூதாட்டி. அவர்
தோட்டத்து வீட்டில் தனியாக இருந்தபோது,
மூதாட்டி உத்தமியிடம் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியைஅடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். மூதாட்டி உத்தமி கொடுத்த புகாரின் பேரில் தப்பி ஓடிய 2 கொள்கையர்களை கள்ளிமந்தயம் போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment