வேடசந்தூர் அருகே கல்குவாரியில் வெடி வெடித்து இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலி - படுகாயம் அடைந்த இருவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 14 September 2023

வேடசந்தூர் அருகே கல்குவாரியில் வெடி வெடித்து இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலி - படுகாயம் அடைந்த இருவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே சுந்தரபுரியில் G.S.R கிரசர் என்ற பெயரில் தனியார் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இன்று பாறைகளை உடைக்க வைத்த வெடி வெடிக்கும் பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டு வந்தனர்.


குவாரியில் வெடிவைத்துக் கொண்டிருந்த பொழுது மேலே இருந்து கற்கள் சரிந்து வெடியின் மீது விழுந்ததால் திடீரென வெடி வெடித்து சிதறியது. இதில் அரசம்பட்டியைச் சேர்ந்த நாராயணன்(60), சுந்தரபுரியைச் சேர்ந்த வேலு என்ற மேத்தியு(55) ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.


சுந்தரபுரியை சேர்ந்த கோபால், மாரியப்பன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad