திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக கட்டிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு அமைச்சர் சக்கரபாணி பேசிய போது, குஜிலியம்பாறை மற்றும் பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான இடங்களில் சீமை கருவேலை மரங்கள் அதிக அளவில் உள்ளது.
சீம கருவேலை மரங்களை மூன்று ஹிட்டாச்சி வாகனங்கள் மற்றும் மரங்களை வெட்டும் இயந்திரங்களை கொண்டு செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலை உதவியுடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் சீமை கருவேலை மரங்களை அகற்றி அனைத்து பேரூராட்சிகளிலும், ஊராட்சிகளிலும் மரங்களை நட வேண்டும். மரங்களை நாம் வளர்த்தால் மரங்கள் நம்மளை வளர்க்கும் என்று கலைஞர் கூறியிருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிலேயே எந்த மாநிலங்களிலும் செயல்படுத்த முடியாத கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார் என்று கூறினார்.
தங்களுடைய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வராத இல்லத்தரசிகள் வருகின்ற 18ஆம் தேதி முதல் கோட்டாட்சியரிடம் ஆன்லைன் மூலம் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யலாம். அதோடு தகுதியுடைய இல்லத்தரசிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபடக்கூடாது என்று முதல்வர் உறுதியாக இருக்கிறார் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்தி ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment