திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து சென்று ஆத்து மேட்டில் உள்ள ஸ்டேட் பாங்க் முன்பாக இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்சம் பணம், பெட்ரோல் டீசல் ஆட்டோ கேஸ் விலையை தொடர்ந்து உயர்த்தி ஏழை எளிய மற்றும் தொழிலாளர்களை வஞ்சிக்கும் மதவாத ஊழல் பாஜகவே ஆட்சியை விட்டு வெளியேறு என பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 23 பேர்களை வேடசந்தூர் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அழைத்துச் சென்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல்.இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment