திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல்(65). மில் தொழிலாளி. இவர் நேற்று இரவு வேலை முடித்து தனது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். நள்ளிரவில் இவரது வீட்டின் முன்பு பயங்கர சத்தம் கேட்டது. இதனால் ஜோதிவேல் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து பார்த்தனர்.
அப்போது அவரது வீட்டு முன்பு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. அதன் அருகே கண்ணாடி பாட்டில்கள் சிதறிக்கிடந்தன. இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜோதிவேல் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா அல்லது வேறு யாரேனும் தீ வைத்து விட்டு சென்றார்களா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment