திண்டுக்கல் மாவட்டம் சுந்தரபுரி கல்குவாரியில் வெடி விபத்து 2 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது சுந்தரபுரி. இங்கு இயங்கி வரும் ஒரு தனியார் கல் குவாரியில் இன்று பாறை உடைக்க வெடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாறை உடைக்க வைத்த வெடி வெடித்ததில், துரதிஷ்ட வசமாக இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் வெடி வைத்து பறைகளை உடைக்கும் வழக்கமே இது போன்ற விபத்துகள் ஏற்பட காரணமாக இருப்பதால் இனிமேல் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment