திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் திருக்கோவிலில் செல்போன் ,புகைப்படம் ,வீடியோ கருவிகளுக்கு தடை ஐந்து ரூபாய் கட்டணத்தில் பாதுகாக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் திருக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இங்கு நாள்தோறும் தமிழகம் கேரளம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க தினமும் வருகின்றனர். இந்நிலையில் பழனி கோவிலில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போன் ,புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் கருவிகளை கோவிலுக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தங்கள் செல் போன் உள்ளிட்ட புகைப்பட வீடியோ கருவிகளை ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி பாதுகாப்பு அறையில் வைத்து கொள்ள கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.இதனை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு தெரிவிக்கின்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment