திண்டுக்கல்லில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை ஆட்சியர் பூங்கொடி துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 22 September 2023

திண்டுக்கல்லில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை ஆட்சியர் பூங்கொடி துவக்கி வைத்தார்.


திண்டுக்கல்லில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை ஆட்சியர் பூங்கொடி துவக்கி வைத்தார்.


திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், 30 சதவீத தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து முதல் விற்பனையும் துவக்கி வைத்தார். திண்டுக்கல் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.44.68 லட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டது. நடப்பு ஆண்டு 2023ல் விற்பனை குறியீடாக ரூ.85.00 லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர்காக சுடிதார் ரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணை கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளருக்காக வரவழைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தார்.


இந்த விழாவில் கோ-ஆப்டெக்ஸ் வர்த்தக மேலாளர் சங்கர், ரகம் மற்றும் பகிர்மானம் மேலாளர் மோகன்குமார்,


உதவி விற்பனையாளர் சங்கீதா மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad