திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவிலில் பாரதிராஜா சாமி தரிசனம்
புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் இராமலிங்கபட்டியில் உள்ளது.
இந்தக் கோவிலின் கருவறை, பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. அதில் 17 அடிக்கு 21 அடி என்ற அளவில் முருகன் சன்னிதி அமைந்திருக்கிறது. அதற்குள், 8-க்கு 8 அடி என்ற அளவிலான கருவறையில் முருகன் வீற்றிருக்கிறார். பாதாளத்தில் (பூமிக்கு அடியில்), செம்பு உலோகத்திலான முருகன் வீற்றிருப்பதால் 'பாதாள செம்பு முருகன்' என்ற பெயர் ஏற்பட்டது. தரைதளத்தில் ஒன்றும், பாதாளத்துக்குள் (பூமிக்கு அடியில்) ஒன்றும் என 2 கருவறைகளை கொண்டதாக இக்கோவில் உள்ளது. பாதாளத்தில் உள்ள கருவறைக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு பக்தர்கள் 18 படிகளை ஏறி இறங்கிச் செல்கின்றனர்.
இன்று இயக்குனர் பாரதிராஜா இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். இக்கோவிலின் பெருமைகளை கேள்விப்பட்டு வந்ததாக கோவில் நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment