கரூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு குஜிலியம்பாறை வழியாக தினத்தோறும் கரூர்-க்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கபட்டு வருகிறது. இதில் அந்த வழியாக உள்ள கிராமங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள், மாணவிகள் தினந்தோறும் திண்டுக்கல், கரூர் பகுதியில் உள்ள கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை கரூரிலிருந்து திண்டுக்கல்-க்கு தனியார் பஸ்சை மருதமுத்து ஒட்டி வந்தார். அதே பஸ்ஸில் நடத்துனராக சிவக்குமார் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கரூரை அடுத்துள்ள தான்தோன்றி மலையில் உள்ள அரசு கல்லூரி படிக்கும் மாணவர் ஒருவர் பஸ்சில் ஏறி உள்ளார் உள்ளார்.
இவர் கோம்பை பிரிவில் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்த சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை கண்டக்டர் சிவகுமார் இது நான் ஸ்டாப் பஸ் எங்களுக்கு டைமிங் இல்லை நாங்கள் அந்த நிறுத்தத்தில் முடியாது பின்னாடி வரும் டவுன் பஸ்ஸில் ஏறி வாருங்கள் என கூறியுள்ளார்.
இதனால் கல்லூரி மாணவர் கண்டக்டர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாச வார்த்தை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் கோவமான கல்லூரி மாணவர் தனது நண்பர்களுக்கு போன் செய்து பஸ்ஸில் நீங்களும் ஏறுங்கள் எனக் கூறி குஜிலியம்பாறை பேருந்து நிறுத்தத்தில் அவரது நண்பர்களை சண்டை போடுவதற்காக பஸ்ஸில் ஏற வைத்துள்ளார்.
அங்கிருந்து கிளம்பிய பஸ் கோம்பை பிரிவில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பஸ்ஸில் நிறுத்த சொல்லி கண்டக்டர் மற்றும் நடத்துனரிடம் வம்பிலுக்க ஆரம்பித்தனர். இதனால் சுதாரித்துக் கொண்ட கண்டக்டர் தனது செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கினார். அப்போது அவரை கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கத் தொடங்கினர் இதனால் பேருந்து இருக்கையில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து வேற வழி இல்லாமல் வசதிக்கு திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாய் வருகிறது.
- தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் வேடசந்தூர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment