ஆத்தூர்: சின்னாளப்பட்டியில் இந்தியன் வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பாஜக அரசை கண்டித்து மறியல் போராட்டம்:
கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாமணி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது போராட்டத்திற்கு ஆத்தூர் ஒன்றிய செயலாளர் இலக்கியராஜ் சின்னாளப்பட்டி நகரச் செயலாளர் கல்யாணி விவசாய தொழிற்சங்க பொருளாளர் முகமது மைதீன் விவசாய சங்க பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மறியல் போராட்டத்தில்AITUC ஆட்டோ தொழிற்சங்க தோழர்கள் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் சமையல்கேஸ் விலைவாசி உயர்வை கண்டித்து அரசின் பொது சொத்துக்களை விற்பது மேலும் இந்தியை புகுத்தி தமிழை பறிப்பதாகவும் மத்தியில் ஆளும்பாஜக அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சின்னாளப்பட்டி காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைத்து பின்பு விடுவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment